Sunday, September 29, 2019

ஶ்ரீரங்கமஹாகுரு - 37 (Sriranga Mahaguru - 37)

ஶ்ரீகுருவின் கண்ணோட்டம் – 26 

ஏன் இந்த முணுமுணுப்பு?
===========================================================

மூலம்: திரு. வரததேசிகாசார்யர்
தமிழாக்கம்: திருமதி வனஜா


"வியாதி குணமாக நல்ல மருந்தை உட்கொள்ள வேண்டும்.  பத்தியமும் கடைபிடிக்க தேவையாகும். ஆனால் இவ்விரண்டிற்கும் இடையே ஒரு பயனற்ற மூட வழக்கத்தையும் கடைபிடிக்கிறார்களே"
 "என்ன வழக்கமப்பா அது"?
"மருந்து, மாத்திரை மற்றும் லேகியம் போன்றவற்றை உட்கொள்ளும்போது ஏதோ மந்திரத்தை வேறு முணுமுணுக்கின்றனர்."
"அந்த மந்திரத்தை கவனித்தருக்கிறாயா"
"நன்றாக கவனித்திருக்கிறேன். முன்காலத்தின் மூட நம்பிக்கையின் அடையாளம் என்று அதனை பதிவு செய்திருக்கின்றேன் "
"நான் அதனை கேட்கலாமா?"
 "கேளுங்கள்- சரீரே ஜர்ஜரீ பூதே வ்யாதிக்ரஸ்தே களேபரே|
         ஔஷதம் ஜாஹ்னவீ தோயம் வைத்யோ நாராயணோ ஹரி:"  
"அதன் பொருள் என்ன தெரியுமா?"
"உடல்நலம் குன்றி, நோய்வாய்படும்போது கங்கை நீரே மருந்தாகும், இறைவனே வைத்தியன் என்பது கருத்து."
"மருந்து உட்கொள்ளும்போது இதனை உச்சரிப்பதில் ஏதாவது இடைஞ்சல் உள்ளதா? அல்லது தவறா?"
"தவறேதும் இல்லை. ஆனால் பயனும் ஏதுமில்லை. அதனை உச்சரிப்பவனுக்கு இறைவனிடத்தோ, மருந்து, மற்றும் வைத்தியனிடத்தோ முழு நம்பிக்கை இருப்பதில்லை."
"அவ்வளவு விரைவில் முடிவு செய்யக்கூடாதப்பா.உண்மையில் இறைவனை நினைக்காவிடில் நோய்முற்றிலும்  குணமாவதே இல்லை "
"அது எவ்வாறு"?
"இறைவன் நிம்மதி, மகிழ்ச்சி, சமாதானம், தைர்யம், வீரம் இவற்றின் முழு உருவம். அவன் நினைவுடன் மருந்து உட்கொள்கையில் மனதின் குற்றமும் குறையும் நீங்கி உடல் நோயும் நீங்குகிறது. மருந்தை மட்டுமே  உட்கொண்டால்  உடலின் வெளியில் காணும் நோய் மடடும் குணமாகலாம். ஆனால் மனதில் உள்ள நோய்(ஆதி) மற்றும் உடலில் உள்ள நோய்(வியாதி) இரண்டும்  நீங்குவதே உண்மையான நலம். ஆதி, வியாதிகளிரண்டும் நீங்க வேண்டுமெனில் மருந்து உட்கொள்கையில் இறைவனை நினைவதும் மிக முக்கியமாகும்.